அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை! - அரசாங்கத்தில் சிக்கல்!

அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவிப்பால் வெடித்தது சர்ச்சை! - அரசாங்கத்தில் சிக்கல்!

அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்த சர்ச்சை கருத்தால் அரசாங்கம் சிக்கலை எதிர் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மூன்று கிலோ அரிசியில் ஒரு குடும்பம் இரண்டு வாரங்கள் உணவு சமைத்து உட்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ள கருத்தே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே 2500 ரூபாவில் ஒரு குடும்பம் ஒரு மாதத்திற்கு உணவு உட்கொண்டு வாழலாம் என கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பியவர் பந்துல குணவர்தன.

இந்தநிலையில், அரசாங்கம் 1000 ரூபாவிற்கு நிவாரண பொதி வழங்குவதாகவும் ஆனால் அந்த நிவாரண பொதியை குறைந்த விலையில் வேறு இடங்களில் சிலர் விற்பனை செய்வதாகவும் ஆனால் அரசாங்கத்தின் நிவாரண பொதியில் உள்ள பொருட்கள் மிகவும் தரமானவை எனவும் பந்துல தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.