PHOTOS : இறந்த நிலையில் பெருமளவில் கரையொதிங்கிய டொல்பின்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : இறந்த நிலையில் பெருமளவில் கரையொதிங்கிய டொல்பின்கள்!

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானா கடற்கரையில் அண்மைய நாட்களில் 60இற்கும் மேற்பட்ட டொல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக அந் நாட்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த டொல்பின்களின் உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை, கடலில் நிறம் மற்றும் வெப்பம் என்பனவும் சாதாரண நிலையிலேயே உள்ளதாக கானாவின் மீன்வள ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஆர்தர் டாட்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் டொல்பின்களின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய, அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

இவற்றின் உயிரிழப்பு காரணமாக டொல்பின்கள் மற்றும் சமீபத்தில் பிடிக்கப்பட்ட ஏனைய மீன்களை உணவாக உட்கொள்வதற்கு எதிராக கானா அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் பெப்ரவரியில் மொசாம்பிக் கடற்கரையில் 111டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.