மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்தார்.


இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விமான நிலையமாகவும், சரக்கு ( கார்கோ) மையமாகவும் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

விமான நிலையத்திற்கு அருகே ஒரு செயலாக்க மண்டலம், விமானம் பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பித்தல் நிலையம் (MRO) மற்றும் டியுட்டு ஃப்ரீ ஷாப்பிங் வளாகம் ஆகியவை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்காக மொத்தமாக 247.7 மில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்கபட்டதாகவும், சீன வங்கியில் இருந்து 190 மில்லியன் அமெரிக்க டாலர்களை சலுகைக் கடன்களாக பெற்றதாகவும், விமான நிலையம் மற்றும் விமான நிறுவனம் மீதமுள்ள நிதியை வழங்குகின்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விமான நிலையம் மார்ச் 18, 2013 அன்று முதக் செயல்படத் தொடங்கியதாகவும் 2020 நவம்பர் வரை ரூ.445,319,656 வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post