ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய நடவடிக்கை!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய நடவடிக்கை!

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவை சிறையில் அடைக்க முயற்சித்து வருவது தெளிவாகிறது என்று கம்பஹா மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் அஜித் பஸ்நாயக்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியை குறிவைத்து பேராயர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை அரசியல் ரீதியாக ஊக்கப்படுத்தப்பட்ட அறிக்கையாகத் தோன்றியது என்றும் அவர் மேலும் கூறினார்.

நாடு பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இருக்கும் நேரத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர்ச் கட்சி தேர்தலில் போட்டியிடுவதாக கூறிய உடனே, பேராயர் இவ்வாறு கூறியது அரசியல் சதி என்று தோன்றியதாகவும் தெரிவித்தார்.

இன்று நாட்டின் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை மறைக்க பேராயர் மூலம் இவ்வாறான அறிக்கையை வெளியிடப்படுகின்றதா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறினார்.

யக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.