ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்தினை நிரப்புவது இவரா? - வெளியானது தகவல்!

ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்தினை நிரப்புவது இவரா? - வெளியானது தகவல்!

சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றியடமாகியுள்ள நிலையில் , அந்த இடத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் மானப்பெரும தெரிவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐ. ம. சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின், பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னறிவிப்பு எதுவும் இன்றி தொடர்ச்சியாக 3 மாதங்கள் சபை அமர்வில் பங்கேற்காவிட்டால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துவிடுவார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், ரஞ்சனின் பதவியை பாதுகாக்கும் நோக்கில் அவருக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்குவதற்கான யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்திருந்தாலும் அதனை சபாநாயகர் ஏற்கவில்லை.

அத்துடன் ரஞ்சனின் வெற்றிடத்திற்கு, கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளவ பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவார்.

கடந்த 2020 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐ. ம.சக்திக்கு ஐந்து ஆசனங்கள் கிடைத்தன.

விருப்பு வாக்கு பட்டியலில் 103,992 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்த ரஞ்சன் எம்.பி.பதவியை இழந்துள்ளதால், 6 ஆம் இடத்தில் உள்ள அஜித் மானப்பெரும எம்.பியாக தெரிவாகும் நிலை உருவாகியுள்ளது.

இதேவேளை மேயர், மேல் மாகாணசபை உறுப்பினர் பதவிகளை வகித்துள்ள அஜித் மானப்பெரும, 2010 ஆம் ஆண்டு தேர்தலிலும், இது போன்ற ஒரு சூழ்நிலையால் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அந்த பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகவில்லை.

பின்னர் , 2013 மே 30 ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜயலத் ஜயவர்தன உயிரிழந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அஜித் மானப்பெரும நியமிக்கப்பட்ட நிலையில், 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அஜித் மானப்பெரும வெற்றிபெற்றார்.

மேலும் 2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அவர் நாடாளுமன்றம் தெரிவாகவில்லை எனினும் விருப்பு வாக்கு பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்தார்.

இவ்வாறன நிலையில் தற்போது ரஞ்சனின் பதவி வெற்றிடமாகவுள்ள நிலையில் அந்த இடத்திற்கு மீண்டும் அஜித் மானப்பெரும நாடாளுமன்றம் வரவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.