
சிறு வயதுடைய மகனை தனது வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்திற்கு பேருந்தினை செலுத்த அனுமதித்த குற்றச்சாட்டில் பஸ் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
பேருந்துடன் குறித்த 15 வயது சிறுவனையும் மித்தெனிய பொலிசார் கைது செய்துள்ளனர்.
சாரதி அனுமதி பத்திரம் உடைய நபர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பேருந்து மற்றும் சிறுவன் பொலிஸ் ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.