விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க கூட்டணி? அரசியலில் புது திருப்பம்?

விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க ரணவக்க கூட்டணி? அரசியலில் புது திருப்பம்?

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தை நிறுவுவதில் முன்னிலை வகித்த பல சிவில் சமூக அமைப்புகளும் இக்கலந்துரையாடல்களில் அங்கம் வகிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தன.

மேலும், கொழும்பு நகரினை தளமாகக் கொண்ட பல முன்னணி தேரர்களும் இவரகள் இருவரும் சேர்ந்து அரசியல் பயணத்தில் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இருவரும் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்கவில்லை எனவும், விரைவில் இருவரும் பேச்சுவார்த்தைகளை நடாத்த முயற்சித்து வருவதாகவும் என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.