கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்பு!

கொழும்பு – கல்கிஸ்ஸை, காலி வீதியில் ஒரு வீட்டின் அருகே கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இறந்தவர் 22 வயதான கல்கிஸ்ஸை பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் தற்போது கலுபோவில வைத்தியசாலையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post