சிறிய அளவில் கசிப்பு காய்ச்சுவோருக்கு அனுதாப அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்! -அருந்திக பெர்னாண்டோ

சிறிய அளவில் கசிப்பு காய்ச்சுவோருக்கு அனுதாப அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும்! -அருந்திக பெர்னாண்டோ


சிறிய அளவில் கசிப்பு காய்ச்சி மோசடியில் ஈடுபடுவோருக்கு மாற்று வழியொன்று அறிமுகப்படுத்தப்படும் வரை அனுதாபம் காட்டி நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆளும் கட்சி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கூறுகிறார்.


வென்னப்புவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசும் போது அவர் இதனை தெரிவித்தார். 


இது தொடர்பில் அவர் வென்னப்புவ ஏ.எஸ்.பி எரிக் பெரேராவுக்கு முன்மொழிந்தார்.


இருப்பினும், ஏ.எஸ்.பி அதற்கு உடன்படவில்லை, கசிப்பு காய்ச்சுவதை ஒரு சுயதொழில் செய்ய முடியாது அது சட்டவிரோதமானது என்றும் சுட்டிக்காட்டினார்.


இது தொடர்பாக தெரண ஊடகம் ஆடியோ பதிவொன்றை ஒளிபரப்பியது.


-எம்.எம் அஹமத்கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post