நாளை 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தீவிர எச்சரிக்கை!

நாளை 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தீவிர எச்சரிக்கை!


இலங்கையில் ஆறு மாவட்டங்களில் நாளை (02) வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலைக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.


திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பொலனறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை வெப்பநிலை ஆபத்தான அளவில் இருக்கும்.


இதனால் உடல் சோர்வு ஏற்படலாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


இந்த பகுதிகளில் உள்ள மக்கள் நாளை இயன்றவரை வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதுடன், நிழலான பகுதிகளில் தங்கியிருக்குமாறும், அடிக்கடி நீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மெல்லிய மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post