தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நட்ட ஈடு செலுத்த வேண்டும்! 27 வழக்குகள் தாக்கல்!

தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர் நட்ட ஈடு செலுத்த வேண்டும்! 27 வழக்குகள் தாக்கல்!


2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த, பலத்த காயமடைந்த, அங்கவீனமுற்றவர்களின் உறவினர்களுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 27 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி நிலந்த ஜயவர்தன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த வழக்குகளின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும், தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையூடாக பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் தமது கடமை மற்றும் பொறுப்புகளை தவறியுள்ளதால், அவர்களிடமிருந்து நட்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்கான உரித்து தங்களுக்கு காணப்படுவதாகவும் அதனை செலுத்துமாறு உத்தரவிடுமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post