- இலங்கையில் இன்று 952 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 102,331 ஆகவும், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7,110 ஆகவும் காணப்படுகின்றது.
- 266 கொரோனா தொற்றாளர்கள் இன்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர், குணமடைந்தோர் எண்ணிக்கை 94,577 ஆக உள்ளது.
- கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 10 கிராம உத்தியோக பிரிவுகள் இன்று தனிமைப்படுத்தப்பட்டன.
- மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனாக்கள் ஏப்ரல் 30 வரை மூடப்பட்டன
- மொனராகலை, சியாம்பலந்துடுவ மற்றும் புத்தால கல்வி வலயங்களில் 15 பாடசாலைகள் ஏப்ரல் 30 வரை மூடப்படும்.
- கொரோனா தொற்றுக்கு இலக்கான ஊழியர் ஒருவர் இனங்காணப்பட்டதால் பத்தரமுல்லயில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகம் ஏப்ரல் 27 மற்றும் 28 திகதிகளில் மூடப்படும்.
- நாளை கடமையில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க அதிகாரம் அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது - பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்
- தம்புள்ள பொருளாதார மையம் இன்று முதல் இது வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படும் - இராணுவ தளபதி
- நாடு முழுவதிலும் அனஒத்த்ய் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை படுக்கைகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தீவிர சிகிச்சை பிரிவுகளின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சுதர்ஷனி
(யாழ் நியூஸ்) - எம் ஐ மொஹமட்