பஸ்ஸினை செலுத்திய குற்றச்சாட்டில் 15 வயது மாணவன் கைது!

பஸ்ஸினை செலுத்திய குற்றச்சாட்டில் 15 வயது மாணவன் கைது!


ஹம்பாந்தோட்டை - மித்தெனிய பகுதியில் வாகன ஓட்டுநர் உரி​மம் இல்லாமல், 53 ஆசனங்களைக்கொண்ட பஸ்ஸொன்றை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான பாடசாலை மாணவனை மித்தெனிய ​பொலிஸார் கைது செய்துள்ளனர்.


தன்னுடைய தந்தைக்குச் சொந்தமான அந்த பஸ்ஸினை தங்களுடைய வீட்டிலிருந்து மித்தெனிய நகரத்துக்கு செலுத்திக்கொண்டு வந்தபோதே இவ்வாறு அம்மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


இம்முறை, க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் தோற்றவிருக்கும் வயது குறைந்த ஒருவரை இவ்வாறு பஸ்ஸை செலுத்துவதற்கு அனுமதியளித்தமை தொடர்பில் பஸ்ஸின் உரிமையாளர் எனக் கூறப்படும் தந்தையை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post