இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விவகாரம்; இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விவகாரம்; இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!


இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடைசெய்து நேற்றைய தினம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.


இந்த தடையினால் அடிப்படைவாதிகள் இலங்கையில் இருந்து தமிழகத்திற்குள் ஊடுருவுவதற்கான அச்சுறுத்தல் நிலவுவதால் தமிழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


இலங்கையிலிருந்து அடிப்படைவாதிகள் விமானம் அல்லது கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக தமிழகத்தில் குடியேறுவதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழகத்தின் விமான நிலையங்கள் மற்றும் கரையோர பகுதிகளின் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு மாநில காவல்துறை பணிப்பாளர் நாயகம், ஜே.கே.திருபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


அடிப்படைவாதிகள் தமிழகத்தை தளமாக கொண்டு இயங்குவதற்கு இடமளிக்க கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே புலனாய்வு நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு தமிழக காவல்துறை பணிப்பாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.