இவ்வருடம் மாத்திரம் 10,000 இற்கும் மேற்பட்ட வாகன பதிவுகள்!

இவ்வருடம் மாத்திரம் 10,000 இற்கும் மேற்பட்ட வாகன பதிவுகள்!

2021 இன் முதல் மூன்று மாதங்களுக்குள் 10,661 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் சுமித் அலககோன் தெரிவித்துள்ளார். 

அதன்படி ஜனவரியில் 3,350 வாகனங்களும், பெப்ரவரியில் 3,661 வாகனங்களும், மார்ச் மாதத்தில் 3,650 வாகனங்களும் புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இவற்றில் மோட்டர் சைக்கிள்கள் தான் அதிகளவில் (3,525) புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதேநேரம் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 196,937 வாகன உரிமையாளர் இடமாற்றங்கள் நடந்ததாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையளர் மேலும் தெரிவித்தார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.