VIDEO : ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையினை நிறுத்த திட்டமிட்ட 17 முஸ்லிம் அமைச்சர்கள், ஹலால் என்று சொல்லி தீவிரவாதத்தினை வளர்த்தார்கள் - மொஹமட் முசம்மில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையினை நிறுத்த திட்டமிட்ட 17 முஸ்லிம் அமைச்சர்கள், ஹலால் என்று சொல்லி தீவிரவாதத்தினை வளர்த்தார்கள் - மொஹமட் முசம்மில்!


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை மறைக்க நல்லாட்சியின் அரசாங்கத்தில் இருந்த 17 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முகமது முசம்மில் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் இருந்தே இதனை தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

ஈஸ்டர் ஞாயிறு தக்குதல்  தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

“ஈஸ்டர் தாக்குதல் என்பது தற்செயலாக நடந்ததொன்று அல்ல. நாம் அனுபவிக்க வேண்டியது பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்டதன் விளைவாகும். முன்னைய காலத்தில் தளதா மாளிகையில் பணிபுரிந்த முஸ்லிம்கள் இருந்தனர். அவர்கள் இறைச்சி சாப்பிடவில்லை. அவர்களின் மதம் இஸ்லாம் என்றாலும், அவர்கள் தளதா மாளிகையில் பணியாற்றினர். இதுபோன்ற தேசிய ஒற்றுமையைக் கொண்ட ஒரு நாட்டில் இந்த அரசியல்வாதிகள் விதைத்த இனவெறியின் முடிவுகளை இன்று நாம் அனுபவித்து வருகிறோம். (யாழ் நியூஸ்)

முன் வரிசையில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தான் சஹரானை உருவாக்கினார்கள். ஆணையத்தில் அறிக்கையில் எனக்கு ஒரு விஷயம் பிடிக்கும். அதைத்தான் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று தெளிவாக அழைக்கப்படுகிறது.

$ads={1}

இந்த நாட்டில் எந்த முஸ்லிம் தலைவர் நாட்டில் இருக்கும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் சார்பாக பேசினார்கள்? ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கும்போது ஒருவர் சரி வாய் திறந்தார்களா? ஜெனீவா பிரச்சினைக்கு யாராவது வாய் திறந்திருக்கிறார்களா? குறைந்த பட்சம் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்று சரி. தினமும் செய்தது தீவிரவாத கோரிக்கைகளை முன்வைத்தது மட்டும் தான். 

இறுதியில், இந்த நாட்டில் உள்ள முஸ்லிம் ஹோட்டல்களில் இருந்து சாப்பிட்டது சிங்களவர்கள்தான். மாத்தறை சாப்பாட்டு கடையில் சாப்பிட்டது முஸ்லிம்கள் தான். ஆனால்  தீவிரவாத அரசியல்வாதிகள் ஹலால் சான்றிதழைக் கொண்டு வந்து பிரித்துவிட்டனர்.” -யாழ் நியூஸ்

රිෂාඩ් බදියුදීන්, රවුෆ් හකීම්, මුජිබර් රහුමාන් ඉදිරියේ තියාගෙන මුසම්මිල් ඉස්ලාම් අන්තවාදය ගැන පාර්ලිමේන්තුව දෙවනත් කරයි. 2021-03-10 පාර්ලිමේන්තු විවාදය

Posted by Mohomed Muzammil on Wednesday, March 10, 2021

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.