நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இணையதளம் துவங்கி வைக்கப்பட்டது!

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இணையதளம் துவங்கி வைக்கப்பட்டது!


நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் www.slwpc.org என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று முற்பகல் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், நாடாளுமன்ற குழு அறை இலக்கம் 01இல் நடைபெற்ற இந்நிகழ்வில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவும் பங்கேற்றார்.


அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட ஒன்றியத்தின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.