எப்படி மரணித்தார் என்பதை உறுதி செய்ய தலைப்பகுதி அவசியம்! தலையை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!
advertise here on top
advertise here on top

எப்படி மரணித்தார் என்பதை உறுதி செய்ய தலைப்பகுதி அவசியம்! தலையை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கொழும்பு புறக்கோட்டை - டாம்‌ வீதியில்‌ தலை துண்டிக்கப்பட்ட நிலையில்‌ மீட்கப்பட்ட சடலம்

கொழும்பு புறக்கோட்டை - டாம்‌ வீதியில்‌ தலை துண்டிக்கப்பட்ட நிலையில்‌ மீட்கப்பட்ட சடலம்‌, குருவிட்டை பொலிஸ்‌ பிரிவின்‌ - தெப்பனாவ பகுதியை சேர்ந்த 30 வயதான திலினி யசோதா ஜயசூரிய மெனிகே எனும்‌ யுவதியுடையது என மரபணு பரிசோதனையில்‌ (டி.என்‌.ஏ) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்‌, இன்று (09) கொழும்பு விசேட சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல்‌ ஹக்‌ முன்னெடுத்த பிரேத பரிசோதனைகளில்‌, குறித்த யுவதியின்‌ தலையானது, அவர்‌ மரணித்த பின்னரே உடலிலிருந்து வெட்டப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில்‌ யுவதி எப்படி மரணித்தார்‌ என்பதை உறுதியாக கண்டறிய, அவரது தலைப்‌ பகுதி அவசியம்‌ என கொழும்பு விசேட சட்ட வைத்திய அதிகாரி ரூஹுல்‌ ஹக்‌ அறிவித்துள்ள நிலையில்‌, தலையை தேடிய விசாரணைகள்‌ தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ்‌ ஊடகப்‌ பேச்சாளர்‌, பிரதி பொலிஸ்‌ மா அதிபர் அஜித்‌ ரோஹன தெரிவித்தார்‌.

பொலிஸ்‌ தலைமையகத்தில்‌ இன்று விசேட செய்தியாளர்‌ சந்திப்பை நடாத்தியே அவர்‌ இதனை வெளிப்படுத்தினார்‌.

இது குறித்து பொலிஸ்‌ பேச்சாளர்‌ பிரஇப்‌ பொலிஸ்‌ மா அதிபர்‌ அஜித்‌ ரோஹன மேலும்‌ தெரிவிக்கையில்‌,

"டாம்‌ வீதியில்‌ கடந்த மார்ச்‌ மாதம்‌ முதலாம்‌ இகத மீட்கப்பட்ட தலையற்ற சடலம்‌, குருவிட்டை தெப்பனாவ பகுதியை சேர்ந்த யுவதியுடையது என ஏற்கனவே அடையாளம்‌ காணப்பட்ட போதிலும்‌, தலையின்றி சடலம்‌ காணப்பட்டமையால்‌ சந்தேகத்திற்குடமின்றி ஆள்‌ அடையாளத்தைஉறுதி செய்வதற்காக மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்ட யுவதியின்‌ உடலிலிருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகள்‌, அவரின்‌ தாய்‌ மற்றும்‌ சகோதரர்களின் மாதிரிகளுடன்‌ ஒப்பீடு செய்யப்பட்டு உயிரியல்‌ ரீதியிலான பிணைப்பை உறுது செய்ய பகுப்பாய்வு முன்னெடுக்கப்பட்டது.

அரன்‌ மேலதிக இரசாயன பகுப்பாய்வாளர்‌ டி.எச்‌.எல்‌.டப்ளியூ. ஜயமான்ன முன்னெடுத்த பகுப்பாய்வினில்‌, தாய்‌ மற்றும்‌ சகோதரர்களின்‌ மாதுிரிகளுடன்‌ குறித்த யுவதியின்‌ சடலத்திலிருந்து பெறப்பட்ட மாதிரிகள்‌ ஒத்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை இன்று காலை இடைக்கப்பெற்றது.

இந்‌நிலையில்‌ பொலிஸ்‌ பிரேத அறையில்‌ வைக்கப்பட்டுள்ள தலையற்ற சடலம்‌ மீது, ஆள்‌ அடையாளம்‌ டி.என்.‌ஏ பரிசோதனை ஊடாக உறுதியான பின்னர்‌ பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைகளில்‌ முக்கியமான சில கேள்விகளுக்கு பதில்‌ கிடைத்துள்ளது.

அதாவது குறித்த யுவதியின்‌ தலை, அவர்‌ மரணித்த பின்னரேயே அவரது உடலிலிருந்து வெட்டி வேறாக்கப்பட்டுள்ளது. அவர்‌ கர்ப்பிணி அல்ல. அத்துடன்‌ இறுதியாக உணவு உண்டு 2 முதல்‌ 3 மணி நேரத்தில்‌ அவரது மரணம்‌ நிகழ்ந்துள்ளது.

எனினும்‌, அவரது மரணத்துக்கான காரணம்‌, உறுதஇயாக கண்டறியப்படவில்லை. தலைப்‌ பகுதி, மரணத்துக்கான காரணத்தை கண்டறிய அவசியமானது என சட்ட வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்‌. எனவே, குறித்த யுவதியின்‌ தலைப்‌ பகுதியைத்‌ தேடி தொடர்ச்சியாக விசாரணை நடக்கறது

$ads={1}


இந்த யுவதி கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும்‌ என சந்தேகிக்கப்படும்‌ நிலையில்‌, சந்தேக நபரான உப பொலிஸ்‌ பரிசோதகரும்‌ தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில்‌, அறிவியல்‌ தடயங்களை வைத்து விசாரணைகள்‌ முன்னெடுக்கப்பட்டுள்ளன.' என தெரிவித்தார்‌.

எவ்வாறாயினும்‌ கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலக தகவல்கள்‌, இன்றைய பிரேத பரிசோதனைகளின்போது, குறித்த யுவதியின்‌ தலையற்ற சடலத்தில்‌ எந்த சித்திரவதை, தாக்குதல்‌ காயங்களையோ அல்லது விஷம்‌, நஞ்சூட்டப்பட்டமைக்கான அடையாளங்களோ இல்லை என தெரிய வந்துள்ளதாகவும்‌, அதனால்‌ அவரது மரணம்‌ சம்பவித்த விதத்தை உறுதி செய்ய தலைப்‌ பகுதி அவசியம்‌ என தெளிவானதாகவும்‌ சுட்டிக்காட்டின.

-எம்‌.எப்‌.எம்‌.பஸீர்‌

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.