
கத்தார் நாட்டில் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்ற மாண்புமிகு மஃபாஸ் மொகிதீன் அவர்களுடன் ஶ்ரீலங்கன் கொமியுநிட்டி வெல்பெயார் பெடரேஷன் கத்தார் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டது.
அதன் நிர்வாக அங்கத்தவர்கள் மேற்கொண்ட உத்தியோகபூர்வ சந்திப்பின் போது எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி சமூக நோக்கை மாத்திரம் குறிக்கோளாக கொண்டு மக்களுக்கு செய்யப்படும் CWF QATAR அமைப்பின் சேவைகளைப் பாராட்டியதோடு இச்சேவைகளுக்கு அவரது பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என குறிப்பிட்டார்.
$ads={1}
மேலும், கத்தார் வாழ் இலங்கையர் தற்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு உரிய முறையில் தீர்வுகளை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் குறிப்பிட்ட அவர் இங்குள்ள தூதுவராலயத்தில் குறித்த எண்ணிக்கையிலான அலுவளர்களே பணிபரிவதால் இவ்வாறான சூழ்நிலைகளில் தேவையான சில நடவடிக்கைகள் சிறிது தாமதமாவதாகவும் அதற்கு வெகுவிரைவில் தீர்வு கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
எமக்கு இந்த சந்தர்ப்பத்தினை வழங்கிய தூதுவர் மாண்புமிகு மபாஸ் மொஹிதீன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என அதன் நிர்வாகம் சார்பாக அதன் தலைவர் மொஹமட் அக்ரம் யாழ் நியூஸுக்கு தெரிவித்தார்.






