சீனி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை உறுதி! அரசு அறிவிப்பு!

சீனி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை உறுதி! அரசு அறிவிப்பு!


சீனி மோசடியில் ஈடுபட்ட நபர்களுக்கு தாம் நிச்சயமாக தண்டனையை பெற்றுக் கொடுப்பதாக, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக்க வக்கும்புர தெரிவிக்கின்றார்.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கையில் சீனி தேவைப்பாட்டிற்கு மிகச்சிறிய அளவிலேயே உள்நாட்டு உற்பத்தி காணப்படுகின்றது. 6 இலட்சம் மெற்றிக்தொன் அவசியம். கடந்த வருடத்தில் 60,000 மெற்றிக்தொன் உற்பத்தியே இடம்பெற்றது. விசேடமாக நவம்பர், டிசம்பர், ஜனவரியில் சீனி உற்பத்தியில் செவகனல, பெல்வத்த சீனி தொழிற்சாலைகள் கரும்பு இன்மையினால் மூடப்பட்டன. வெள்ளை நிற சீனியை நாங்கள் இறக்குமதிதான் செய்கின்றோம். இன்று சிவப்பு சீனி இறக்குமதிக்கு தற்காலிகத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


$ads={1}


அதனால் மாதத்திற்கு அவசியமானவற்றை இறக்குமதி செய்யவே இனி அனுமதிக்க வேண்டும். கடந்த அரசாங்கம் இறக்குமதி செய்கின்றபோது ஒரு வரி விலையும், விற்பனை விலையில் மாற்றத்தையும் மேற்கொண்டது. இறக்குமதி செய்பவர்கள் 06 பேர் உள்ளனர். 


வரி நீக்கப்பட்டபோது அதிகளவான தொகையை இறக்குமதி செய்தார்கள். இலாபமும் அவர்களுக்கு அதிகரித்தது. இப்போது சிவப்பு சீனி இறக்குமதிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஒரே தடவையில் ஏன் பாரிய அளவு சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகின்றது. இதில் குற்றம் எவர் செய்திருந்தாலும் தண்டனையை அரசாங்கம் வழங்கும் என்றார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.