புர்கா, அரபு மத்ரஸாக்கள் தொடர்பாக கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புர்கா, அரபு மத்ரஸாக்கள் தொடர்பாக கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து!

புர்கா, அரபு மத்ரஸாக்கள் தொடர்பாக கல்வி அமைச்சர் தெரிவித்த கருத்து!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும்.


மத்ரஸா பாடசாலை மற்றும் புர்கா தடை, அடிப்படைவாதத்துக்கு எதிரான புதிய சட்டங்கள் உருவாக்கல், விசாரணை அறிக்கைகளை நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்ற கட்டமைப்பில் விசேட பொறிமுறையை ஏற்படுத்தல், அடிப்படைவாத செயற்பாடுகளை கண்காணிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவை நிறுவல் ஆகிய விடயங்கள் குறித்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி தொடர்புப்பட்ட தரப்பினருக்கு விசேட ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்தார்.


கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அவர் மேலும் குறிப்பிடுகையில், 


ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறந்த பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இஸ்லாமிய அடிப்படைவாதம் நாட்டில் எதிர்காலத்தில் தலைத்தூக்காத அளவுக்கு பல விடயங்களை செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது. ஆணைக்குழுவின் அறிக்கையின் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பரிந்துரைகளை வெகுவிரைவில் செயற்படுத்துமாறு ஜனாதிபதி தொடர்புபட்ட தரப்பினருக்கும், நிறுவனங்களுக்கும் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.


மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அடிப்படைவாதிகளின் பின்னணி கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்காது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை சுயாதீனமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.


இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டில் எதிர்காலத்தில் தீவிரவாதம், அடிப்படைவாத செயற்பாடுகள் தலைத்தூக்காமலிருக்க வேண்டுமாயின் புர்கா தடை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புர்கா ஆடை மீதான தடையினை சட்டவிரோத செயற்பாடு என கருத முடியாது தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு இத்தீர்மானத்தை கட்டாயம் செயற்படுத்த வேண்டும்.


பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு புர்கா ஆடைக்கு தடை விதித்துள்ளது. இதற்கமைய இலங்கையிலும் பொது இடங்களில் புர்கா ஆடையை அணிவதற்கு நிரந்தர தடை விதிக்கும் சட்டம் நாடாளுமன்றில் உருவாக்கப்படும்.


மாணவர்களின் மத்தியில் அடிப்படைவாதத்தையும், பிற இனத்தவர்கள் மீதான வெறுப்புணர்வையும் மத்ரஸா பாடசாலைகள் தூண்டி விடுகின்றன என்று அறிக்கையில் விசேடமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை ஒரு சாதாரண விடயமாக கருத முடியாது. அனைத்து இன பிள்ளைகளும் 16 வயது வரை கல்வி அமைச்சின் நெறிப்படுத்தலுக்கு அமைய கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.


அடிப்படைவாத செயற்பாடுகளை கொண்டு செயற்படும் மத்ரஸா பாடசாலைகளை தடை செய்ய வேண்டும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது கல்வி அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. 


$ads={1}


நாட்டில் 1,965 மத்ரஸா பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் கற்பிக்கப்படும் கற்கை நெறிகள் குறித்து விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 


அடிப்படைவாத நோக்குடன் செயற்பட்டுள்ள மத்ரஸா பாடசாலைகள் நிபந்தனைகளற்ற வகையில் தடை செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளும் கடுமையான அளவிற்கு முன்னெடுக்கப்படும் என்றார்.


-இராஜதுரை ஹஷான்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.