
தங்க மாலை ஒன்றை வாங்குவது என்ற போர்வையில் கடைக்குள் நுழைந்த நபரொருவர் நகைகளை பெட்டியுடன் எடுத்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பின்பு குறித்த கடைக்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிளில் காத்திருந்த தனது நண்பருடன் தப்பிச் சென்றுள்ளார்.
திருடப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ. 2.5 மில்லியன் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நகை கொள்ளை குறித்து கடையில் இருந்து சிசிடிவி கெமரா காட்சிகள் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டன.