இளம் பெண்ணை காதலித்த 50 வயதுடைய நபர் - கடிதம் எழுதி தற்கொலை செய்த இளம்பெண்!

இளம் பெண்ணை காதலித்த 50 வயதுடைய நபர் - கடிதம் எழுதி தற்கொலை செய்த இளம்பெண்!

நீர்கொழும்பில் பேஸ்புக் இல் மலர்ந்த காதலினால் 24 வயதுடைய பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50 வயதுடைய ஹோட்டல் உரிமையாளரான தனவந்தர்  ஒருவர் 24 வயதுடைய பெண்ணை பேஸ்புக் வாயிலாக காதலித்துள்ளார்.


நீர்கொழும்பை சேர்ந்த குறித்த பெண், குறித்த ஹோட்டல் உரிமையாளருடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் குறித்த பெண் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளர்.

விசாரணையின் போது குறித்த பெண்ணால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் தானும் ஹோட்டல் உரிமையாளரும் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக ஹோட்டல் உரிமையாளர் அச்சுறுத்தல் விடுத்தமையினால் மன வருத்தமடைந்து இந்த முடிவை எடுத்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், குறித்த ஹோட்டலிம் உரிமையாளரான 50 வயதுடைய நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.