ஆம்புலன்ஸ் பிரச்சினையால் பரிதாபமாக ஒருவர் பலி!

ஆம்புலன்ஸ் பிரச்சினையால் பரிதாபமாக ஒருவர் பலி!

பல அரச மருத்துவமனைகளில் உள்ள அவசர நோயாளி காவு வண்டி (ஆம்புலன்ஸ்) களின் டயர்கள் சேதமடைந்து காணப்படுகின்றது. பல அவசர நோயாளி காவு வண்டிகள் ஆபத்தான முறையிலேயே இயங்கி வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, காலியில் உள்ள மருத்துவமனை ஒன்றிலிந்து இன்னோர் மருத்துவமனைக்கு இடமாற்ற செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் குறித்த நோயாளி நேற்று (17) இறந்துள்ளார்.

விபத்துக்குள்ளான கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தனக்கு மருத்துவமனையில் கட்டில் ஒன்று தருமாறு கேட்டதை தொடர்ந்து, மருத்துவ பணிக்கு இடையூறு விளைவித்ததாக மருத்துவமனை பொலிசாரில் அவருக்கு எதிரால புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அசேல சம்பத் இடம் நேற்று (17) பொலிசார் அறிக்கை ஒன்றைப் பெற்றுள்ளனர்.

திரு. விதானகே மேலும் கூறுகையில், நாட்டில் கொரோனா பரவல் நிலவும் இச்சந்தர்ப்பத்தில், மருத்துவமனைகளை முறையைப் பார்க்காத அதிகாரிகள் இந்த நாட்டில் நோயாளிகளுக்கு பெரும் அநீதியினை இழைத்து வருகின்றதாகவும், உடனடியாக குறித்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post