அவ்வாறு தடுப்பூசி பெற்றவர்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்த தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 07 நாட்களுக்கு பின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்ப அனுமதி வழங்கப்படும்.
வீடு திரும்பிய பின்னர், அப்பகுதியின் சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கிய பின்னர், எஞ்சிய 07 நாட்கள் தனது வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
பின்னர் 07 நாட்களின் இன்னுமொரு பி.சி.ஆர் பரிசோதனை எடுக்க வேண்டும். அதில் நேர்மறையாக இருந்தால் உடனே சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சிகிச்சை பெறப்பட வேண்டும் .
அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பொது தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டால், வருகை தந்த தினம் மற்றும் 10 நாட்களின் பின்னர் பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
அந்த இரண்டு பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளின்படி, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.
வீட்டிற்குச் சென்ற பிறகு நான்கு நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
அதேநேரம், கொரோனா பரவலை தொடர்ந்து இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை புதுப்பிக்க சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கொரோனா தடுப்பூசியினை பரிந்துரைக்கப்பட்டவாறு பெற்றுக்கொண்டு, இரு வாரங்களுக்குப் பிறகு, இலங்கை பிரஜை/இரட்டை பிரஜை உரிமை மற்றும் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்தவுடன், விமான நிலையத்தில் (ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட) தடுப்பூசி தொடர்பான சான்றிதழினை விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பின்னர் அவர்கள் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 24 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
பி.சி.ஆர் அறிக்கையின் முடிவுகளின்படி, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்ல அவர்களே பயண ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
$ads={1}
வீடு திரும்பிய பின்னர் அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
சரியான முறையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர், தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட தேவையில்லை.
வீட்டிற்கு வந்து 7 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மேலும் கொரோனா அறிகுறிகள் தென்படுமிடத்து அவர்கள் உடனடியாக சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும். (யாழ் நியூஸ்)

- ஐம். எம். மொஹமட்