மாகந்துரே மதூஷின் சகா கெசெல்வத்த தினுகவின் சடலம் நாடு வந்தது!

மாகந்துரே மதூஷின் சகா கெசெல்வத்த தினுகவின் சடலம் நாடு வந்தது!


துபாயில் உயிரிழந்த பாதாள உலகக்குழு தலைவன் கெசல்வத்த தினுக என்பவரின் சடலம் இன்று (18) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.


மாகந்துரே மதூஷிற்கு பின்னர் அந்த வலையமைப்பை வழிநடத்திய தினுக, இலங்கையில் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி ஆவார்.


இந்நிலையில், துபாயில் அவர் கடந்த 14ஆம் திகதி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.


அவர் மாரடைப்பால் உயிரிழந்து தரையில் கிடந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களின் வெளியாகியிருந்தன. பிரேத பரிசோதனையில் அவர் அதிகப்படியான போதைப்பொருள் பாவனையால் மாரடைப்பால் இறந்தது தெரிய வந்தது.


இன்று (18) காலை 10.47 மணியளவில் துபாயில் இருந்து மாலைதீவு வழியாக UL 232 இலக்க விமானத்தில், கசுன் மதுரங்க ராஜபக்ஷ என்ற பெயரில் சடலம் கொண்டு வரப்பட்டது.


$ads={1}


உடல் கெசல்வத்த தினுக வினதா என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளது.


34 வயதாக ராஜபக்ஷ ஆராச்சி தினுக மதுஷன் அல்லது கெசல்வத்த தினுக, கடவுச்சீட்டான N1453535 ஐப் பயன்படுத்தி வெளிநாடு சென்றதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அவரது தாயார் ரேணுகா அமரசீலி அவரது உடலை அடையாளம் காண இன்று கட்டுநாயக்க வந்தார்.


பொலிஸ் தகவல்களின்படி, கெசல்வத்தையில் உள்ள தினுகவின் மனைவியின் பெயர் சுமாலி பாக்யா திலகரத்ன என அடையாளம் காணப்பட்டார்.


மருதானையில் ஒருவரை கடத்தி கொலை செய்தது, கொழும்பு 12 இல் கொலை, கித்சிரி ராஜபக்ஷ கொலை மற்றும் கோட்டஹேனாவில் லெவ்கே பண்டார மிலனை சுட்டுக் கொன்றது போன்ற குற்றச்சாட்டுகள் தினுக மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post