
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரிகளான முகமது இல்ஹாம் மற்றும் முகமது இன்சாஃப் ஆகியோரின் தந்தைக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கியமை தொடர்பில் ஜே.விபியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
தாக்குதலாளிகளின் தந்தையான இப்ராஹிம் ஜேவிபியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
கொழும்பில் இன்று (18) நடந்த நிகழ்வொன்றில் இதனை தெரிவித்தார்.
மேலும் தாக்குதலை நடத்த இருவரும் 30 மில்லியன் ரூபாவிற்கு அதிக பணத்தை செலவிட்டதாக அவர் தெரிவித்தார்.