இலங்கை கபடி வீராங்கனை மனோரி ஜயசிங்கவின் தடை நீக்கம்!

இலங்கை கபடி வீராங்கனை மனோரி ஜயசிங்கவின் தடை நீக்கம்!

மனோரி ஜயசிங்க

இலங்கை கபடி வீராங்கனையான மனோரி ஜயசிங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த 04 ஆண்டு கால போட்டித் தடையை இலங்கை தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு முகவர் அமைப்பு (Sri Lanka Anti Doping Agent -SLADA) நீக்கியுள்ளது.


பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில்  சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற மனோரி ஜயசிங்க, தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியே போட்டிகளில்  பங்கேற்றிருந்தார் எனக்கூறியே 4 ஆண்டுகள் போட்டித்தடை  விதிக்கப்பட்டிந்தது.


ஜனாதிபதி சட்டத்தரணி நவீன் மாரப்பனவின் ஆலோசனைக்கமைய, உதித்த விக்கிரமசிங்க மற்றும் ரஷ்மி இந்திராதிஸ்ஸ ஆகிய சட்டத்தரணிகள் மனோரி ஜயசிங்கவுக்காக 2 ஆண்டுக்காலமாக நீதிமன்றில் வாதங்களை முன்வைத்திருந்தனர்.


இந்த வீராங்கனையின் சிறுநீர் மாதிரியை சேகரிப்பது மற்றும் போக்குவரத்தின்போது முறையான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஆகவே சிறுநீர் மாதிரி பரிசோதனையின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்த சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


அத்துடன், சிறுநீர் மாதிரியை பரிசோதனையை சோதனை செய்த இந்தியாவைச் சேர்ந்த பரிசோதனை நிலையமானது, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து சோதனையை மேற்கொள்வதற்கான தரத்தை கொண்டதல்ல என உலக தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு முகவர் (World Anti Doping Agent - WADA) நிலையம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இந்த விடயங்களை கருத்திற்கொண்டு, அவரை குற்றமற்றவர் என நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக, மனோரி ஜயசிங்கவுக்கு விதித்திருந்த 04 ஆண்டுகால போட்டித் தடையை இலங்கை தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து தடுப்பு முகவர் அமைப்பு நீக்கியுள்ளது.


இது குறித்து இலங்கை கபடி சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராதா கிருஷ்ணன் சஹீவனிடம் வினவியபோது, 


$ads={1}


2018 இல் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் மனோரி ஜயசிங்க, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியே போட்டிகளில் பங்கேற்றிருந்தார் எனக்கூறியே 04 ஆண்டுகள் போட்டித்தடை விதிக்கப்பட்டது.


இது குறித்து மேற்கொள்ளப்பட்ட  நீதிமன்ற விசாரணைகளையடுத்து, அவர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டதற்கான சான்றுகள் இல்லாத காரணத்தால் அவர் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து மனோரி ஜயசிங்கவுக்கு விதிக்கப்பட் 04 ஆண்டு கால போட்டித் தடை நீக்கப்பட்டுள்ளது என்றார்.


-எம்.எம்.சில்வெஸ்டர்


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.