தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!

தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது!


கொழும்பு - டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.


அதற்கமைய, இப்பெண் உயிரிழந்த பின்னரே அவரது தலை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக DNA அறிக்கையும் வெளியாகியுள்ளது.


அதனடிப்படையில் குறித்த DNA அறிக்கை குருவிட்ட, தெப்பனாவ பகுதியை சேர்ந்த பெண்ணுடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.


$ads={1}


கடந்த மார்ச் மாதம் 01 ஆம் திகதி குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டிருந்ததுடன் தலை இல்லாத காரணத்தினால் இவ்வாறு DNA பரிசோதனை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டிருந்தது.


குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் DNA மாதிரிகளின் ஊடாக குறித்த சடலம் 30 வயதுடைய தெப்பனாவ பகுதியை சேர்ந்த பெண்ணுடையது என உறுதி செய்யப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post