கத்தோலிக்க தேவாலயத்தினுள் நுழைந்த முஸ்லீம் பெண் கைது! கண்டி - கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்!

கத்தோலிக்க தேவாலயத்தினுள் நுழைந்த முஸ்லீம் பெண் கைது! கண்டி - கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்!

katugastota police kandy

கட்டுகஸ்தோட்டை − சியம்பலாகஸ்தென்ன கத்தோலிக்க தேவாலயத்தினுள் கடந்த ஞாயிறு (07) அன்று இடம்பெற்ற கறுப்பு ஞாயிறு திருப்பலிக்கு, அல்குர்ஆனின் உள்ள விடயங்களை எழுதிய ஆவணங்களுடன் வருகைத் தந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


இந்த பெண், தேவாலயத்திற்குள் வருகைத் தந்த வேளையிலிருந்து, அவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.


இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவரது பெயர் முஸ்லிம் பெயரை ஒத்ததாக இருந்துள்ளதாக அறிய முடிகின்றது.


இந்நிலையில், குறித்த பெண்ணை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தமது கைது செய்து தமது பொறுப்பின் கீழ் வைத்துள்ளனர்.


$ads={1}


53 வயதான அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரையே இவ்வாறு பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


குறித்த பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post