இன்றும் ஐந்தாவது நாளாக கொரோனா மரணங்கள் நல்லடக்கம்!

இன்றும் ஐந்தாவது நாளாக கொரோனா மரணங்கள் நல்லடக்கம்!


கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அடக்கம் செய்யும் நிகழ்வு இன்று (09) ஐந்தாவது நாளாகவும் இடம்பெற்றது. 


இன்று பிற்பகல் 04 மணிவரை ஏழு ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.


இதில் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களது ஜனாஸாக்களுமாக ஏழு ஜனாஸாக்கள் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் சாய்ந்தமருது, தர்கா நகர், திருகோணமலை, வெள்ளவத்தை, மாவனல்லை பிரதேசங்களை சேர்ந்த ஒவ்வொரு ஜனாஸாவும், அக்குறனை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு ஜனாஸாக்களும், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொரோனா தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஒதுக்கப்பட்ட மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


$ads={1}


இதற்கமைய ஐந்து நாட்களில் 38 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post