விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து மரணம்!

விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது சிறுமி கிணற்றில் வீழ்ந்து மரணம்!


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கிராமத்திலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து மீட்ட இரண்டரை வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேற்றாத்தீவு கிராமத்தில் வசித்துவரும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருகையில்,

நேற்று (16) தனது வீட்டில் வழமைபோல் விளையாடிக் கொண்டிருந்த உதயராஜ் ஹம்சவர்த்தினி என்ற சிறுமி வளவில் அமைந்திருந்துள்ள கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளது.

சிறுமியின் தந்தை கிணற்றிலிருந்து மீட்ட சிறுமியை களுவாஞ்சி குடிவைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதுடன், சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

$ads={1}

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதவான் க.ஜீவராணி அவர்களின் உத்தரவிற்கமைவாக, பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தைப் பார்வையிட்டதுடன், விசாரனைகளை முன்னெடுத்து, பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனைக்குப்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.