பொதுமக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயலும் எவரையும் கைதுசெய்ய தயங்கமாட்டோம்!

பொதுமக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயலும் எவரையும் கைதுசெய்ய தயங்கமாட்டோம்!


தனிநபர் ஒருவரின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குனரத்ண தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டத்தில் மாற்றங்களை செய்ய வேண்டுமென்றால் நிபுணர்கள் குழு அதனை ஆராய்ந்த பின்னரே மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கான அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் குரோத அரசியலிற்கான விதைகளை தூவி சட்டத்தை மீறி பொதுமக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயலும் எவரையும் கைது செய்ய தயங்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

$ads={1}

தங்கள் பதவிகளிற்கு அப்பால் இந்த நாட்டின் பிரஜைகள் அனைவரும் நாட்டின் சட்டங்களை மதிக்கவேண்டும், தனிநபர் ஒருவரின் விருப்பங்களிற்காக சட்டங்களை மாற்றமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.