Updated at 14:40h : கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் இரண்டாவது இடம் சற்று முன்னர் அனுமதியளிக்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Updated at 14:40h : கொரோனா ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் இரண்டாவது இடம் சற்று முன்னர் அனுமதியளிக்கப்பட்டது!

கொரோனா ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் இன்று (05) அறிவித்தார்.

மன்னார் இரணைத்தீவினை தொடர்ந்து ஓட்டாமவடி இரண்டாவது இடமாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Updated at 2:40pm

கொரோனா தொற்றினால் மரணித்துள்ள முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்துள்ள நிலையில் அதன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு - ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் கிராமத்தில் அமைந்துள்ள தெரிவு செய்யப்பட்ட காணியில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படவுள்ளன.

இன்று (05) மாலை நேரமளவில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் அவர்களின் தலைமையின் கீழ் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்திற்கமைய இவ் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் ஓட்டமாவடி - மஜ்மா நகர் காணியில் முதற் காட்டமாக பத்து குழிகள் தோண்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.