பலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடி - மஜ்மா நகரில் ஜனாஸாக்கள் நல்லடக்கம்!

பலத்த பாதுகாப்புடன் ஓட்டமாவடி - மஜ்மா நகரில் ஜனாஸாக்கள் நல்லடக்கம்!


கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்து வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாக்கள் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் அமைந்துள்ள காணியிலே இவ் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.

பாதுகாப்புப் படையினர் மற்றும் சுகாதாரப் பிரிவினர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இன்று பிற்பகல் 04 மணி வரை இரு ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டன.

இன்றைய தினம் பத்து ஜனாஸாக்களை அடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனாஸாக்களை அடக்கும் பகுதிற்குள் யாரும் செல்லாத வகையில் இராணுவத்தினர் கடும் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

$ads={1}

அத்துடன் ஜனாஸா அடக்கம் செய்யும் இடத்துக்குள் செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-எச்.எம்.எம்.பர்ஸான், எஸ்.எம்.எம்.முர்ஷித்

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.