
வாகன தகடுகளில் மாகாண குறியீட்டை அகற்ற மேலும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் மாகாண குறியீட்டை அகற்றுவது தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு அறிவிக்கப்படும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மாகாணக் குறியீட்டை அகற்றிய பின்னர் வாகன உரிமையாளர் வசிக்கும் மாகாணம் மாறும்போது எண் எண் தகடு மாறாது என்றும், புதிய எண் தகடானது இலங்கை முழுவதும் செல்லுபடியாகும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.
தற்போதைய வாகன இலக்க தகடு சட்டத்தின்படி, ஒரு வாகனத்தின் உரிமையாளரின் வசிப்பிடத்தை மாற்றினால், நம்பர் பிளேட்டை மாற்ற வேண்டும், அதற்காக வாகன உரிமையாளர் மேலதிகமாக ரூ.2000 க்கு செலுத்த வேண்டியும் உள்ளது. (யாழ் நியூஸ்)

