
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு வீழ்ச்சி காணப்படுவதாகவும் இது திருப்திகரமான சூழ்நிலை என்றும் அவர் கூறினார்.
ஆனால் இதன் அடிப்படையில், கொரோனா ஆபத்து குறைந்துவிட்டது அல்லது நம் நாட்டிலிருந்து அழிந்து வருகிறது என்று யாரும் கருதக்கூடாது என்றும், நாம் இன்னும் ஆபத்தில் தான் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.