பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பம்!

பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை ஆரம்பம்!


மேல் மாகாண பாடசாலைகள் தவிர நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் நாளை (15) ஆரம்பமாகவுள்ளன.


மேல் மாகாண பாடசாலைகளில் 05, 11, 13 ஆம் தரங்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகவிருக்கின்றன. கொரோனா தொற்றுக் காரணமாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த வகுப்புக்களில் உள்ள சகல மாணவர்களை அழைப்பதா அல்லது பகுதியளவான மாணவர்களை அழைப்பதா என்பது பற்றி பாடசாலைகளில் நிலவும் இடவசதிகளைக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.