முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை, நமது வார்த்தைகளால் அகற்ற வேண்டும்! -பிரதமர் ஜெசிந்தா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை, நமது வார்த்தைகளால் அகற்ற வேண்டும்! -பிரதமர் ஜெசிந்தா


நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சார்ச் நகரிலுள்ள 2 மசூதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் 2ஆவது ஆண்டு தினம் அந்த நாட்டில் இன்று (14) கடைபிடிக்கப்பட்டது.


அந்த நகர அரங்கத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானவர்கள்  கலந்துகொண்டனர்.


அப்போது பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உரையாற்றுகையில்,


இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசுவதற்கான உரையை தயாரிக்கும்போது எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அந்த வார்த்தையை பயன்படுத்தினாலும் நடந்ததை ஒருபோதும் மாற்ற முடியாது. வார்த்தைகளால் அற்புதங்களை நிகழ்த்த முடியாவிட்டாலும், அவற்றால் காயங்களை ஆற்ற முடியும்.


$ads={1}


கிறைஸ்ட்சார்ச் மசூதித் தாக்குதலின் போது மட்டுமல்ல, அதற்கு முன்பிலிருந்தே முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு இருந்து வருகிறது. நமது வார்த்தைகளால் அந்த வெறுப்புணர்வை அகற்ற வேண்டும். நியூஸாலாந்து அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என்பதை உணர்த்த வேண்டும் என்றார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.