பௌத்தர்கள் வாரத்தில் ஒருநாளேனும் கட்டாயம் விகாரைக்கு செல்ல வேண்டும்! -பிரதமர்

பௌத்தர்கள் வாரத்தில் ஒருநாளேனும் கட்டாயம் விகாரைக்கு செல்ல வேண்டும்! -பிரதமர்


பௌத்தர்கள் வாரத்தில் ஒரு நாளேனும் விஹாரைகளுக்கு செல்ல வேண்டும் என்பதனை கட்டாயப்படுத்த வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


கல்முருவ ஸ்ரீ சுனந்தாராமய விஹாரையில் நேற்று (14) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


எமது இளைய சமூகத்தினர் பிழையான வழிகளில் செல்லாதிருப்பதனை உறுதி செய்ய அவர்கள் விஹாரைகளுக்கு செல்வதனை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.


பிள்ளைகளை தஹாம்பாசல் (அறநெறிப்பாடசாலை) அனுப்புவது கட்டாயப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.


ஏனைய மதத்தினர் மத வழிபாடுகளை சரியான முறையில் செய்கின்றார்கள் எனினும், பௌத்தர்கள் விஹாரைகளுக்கு செல்வதில்லை என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.


$ads={1}


எனினும், ஏனைய மதங்களில் ஞாயிறு கட்டாயம் தேவாலயம் செல்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பௌத்தர்கள் என்ற வகையில் வாரத்தில் ஒரு நாள் அல்லது பௌர்ணமி தினத்திலேனும் விஹாரைகளுக்கு செல்வது கட்டாயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.