மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா? - இராணுவ தளபதி

மீண்டும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுமா? - இராணுவ தளபதி

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலங்களில் தேவைப்படின் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார். 

கடந்த கிரிஸ்மஸ் காலங்களில் இருந்து நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தது என்றும், இவ்வாறான காலங்களில் மக்கள் சுகாதார ஆலோசனையை சரியாக பின்பற்றுவதில்லை என்பதையும் இது காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

2020 க்கு முன்னதஒ போன்று புத்தாண்டு கொண்டாடப்பட்டால் மேலும் நாட்டின் நிலைமை மாறுவதற்கு வாய்ப்புள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post