அஸாத் சாலி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை!

அஸாத் சாலி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை!

தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் சி ஐ டி இனரால் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டிருக்கும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி சிறைச்சாலைக்கு மாற்றப்படுமாயின் உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்ய சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அவரது சட்டவல்லுனர்கள் குழு இதற்கு தேவையான ஆவணங்களை ஏற்பாடு செய்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அஸாத் சாலி நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வரும் நோய்கள் தொடர்பான மருத்துவ சான்றிதழினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறைச்சாலை மருத்துவமனை அல்லது பிற மருத்துவமனையில் அனுமதி கோரப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

அவர் நாட்டின் சட்டத்தை ஏற்கவில்லை என்று கூறிய சர்ச்சைக்குறிய கருத்திற்கு எதிராக கிடைக்கப்பெற்ற புகார்களைத் தொடர்ந்து அஸாத் சாலி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

அஸாத் சாலி நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டிருந்தார். 

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post