எதிர்ப்பு ஆர்பாட்டம் தொடர்பான ஜம்மிய்யதுல் உலமாவின் நடவடிக்கை சரியானதா?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்ப்பு ஆர்பாட்டம் தொடர்பான ஜம்மிய்யதுல் உலமாவின் நடவடிக்கை சரியானதா?

acju protest black sunday

ஜனாஸா எரிப்பு சம்பந்தமாக எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று கட்சி பேதம், மார்கக் கொள்கை வேறுபாடுகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டு நடாத்தப்பட வேண்டும் என்று பல பகுதியில் இருந்தும் கலிமாவின் சொந்தங்கள் வேண்டிக் கொண்டதற்கு இனங்க, கடந்த 23ஆம் திகதி 3.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தலை நகரம் அதிர்ந்து போகும் அளவிலான கவனையீர்ப்புப் போராட்டம் நாட்டின் பல பகுதியிலும் உள்ள மக்கள் இஸ்லாமிய அமைப்புகள்தொண்டு நிறுவணங்கள் அனைத்தும் பங்கு கொண்ட நிலையில் அனைத்துத் தரப்பும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக நடாத்தி முடித்தனர்.


அதேவேலை ஏற்பாட்டுக் குழுவினரால் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவுக்கும் இதில் கலந்துகொண்டு ஜனாஸா எரிப்பு எதிர்ப்புக்கான ஆதரவை தந்து உதவுமாறு ஏற்பாட்டாளர்களால் ஜம்மிய்யாவின் செயலாளர் மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதில் அவர்கள் கலந்து கொள்ளவோ, அல்லது மக்களை கலந்து கொள்ளும்படி வேண்டி அறிக்கைகள் விடவோ இல்லை.


அவர்கள் மௌனமாக இன்னொரு சமூகத்தின் பிரச்சினை போல் தம் நிலையில் இருந்து விட்டனர். இது தம் தலைவரினால் ஏற்பட்ட பிரச்சினை என்பதையும் மறந்து விட்டனர்.


அதேவேலை நாட்டின் பல பகுதிகளில் கபன் சீலைப் போராட்டம் என்று தொடங்கப்பட்டு போராட்டம் தொடர்ந்தும் நடை பெற்ற நிலையில் சில அமைப்புக்களால் நடாத்தப்பட்ட ஆர்பாட்டத்திற்கு மக்களை கலந்துகொள்ள வேண்டாம் கொரோனா தொற்றி விடும் எனவும் அறிக்கை விட்டு மக்களை தடுத்தார்கள். அத்தோடு அவர்கள் ஜனாஸா எரிப்பு சம்பந்தமாக எந்தவித போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை.


இவர்களின் உண்மை முகம் என்ன?


இவர்கள் ஜனாஸா எரிப்பிற்கு ஆதரவா அல்லது தலைவர் சாம்பலை அடக்க மார்கத்தில் அனுமதி உண்டு என அரசுக்கு சார்பாக சமூகத்தை ஏமாற்றியதை நியாயப்படுத்துவதா?


இந்நிலையில், அத்தனை ஜனாஸா விடயங்களிலும் மௌனம் காத்த இவர்கள், தற்போது கிறிஸ்துவ மக்களினால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் கேட்டு நடாத்த இருக்கும் கருப்பு ஞாயிறு தினத்தை ஆதரித்து ஜம்மியத்துல் உலமாவின் செயலாளர் அறிக்கை விட்டிருப்பது நியாயமானதா?


$ads={1}


உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால் இவர்களின் செயல் முஸ்லிம் மக்கள் விடயத்தில் நியாயமற்றதே...


இவர்களின் செயலில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.


-பேருவலை ஹில்மி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.