க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!


கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சை நடவடிக்கைகளின் பின்னர் அமைதியான முறையில் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில், நாளை மறுதினம் (10) நிறைவடையவுள்ளது.


இந்நிலையில், பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், பரீட்சை மத்திய நிலையத்திலோ, அல்லது குறித்த வளாகத்திலோ அமைதியற்ற முறையில் செயற்படுவோரின் பரீட்சை முடிவுகள் செல்லுபடியற்றதாக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


அத்துடன், 1968 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க பரீட்சைகள் சட்டத்துக்கு அமைய, பரீட்சார்த்திகளினால் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.


$ads={1}


மேலும், இந்த விடயம் தொடர்பில் பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


மேலும், பரீட்சை நிலையங்களில் இடம்பெறக்கூடிய இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.