கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய மேலும் பல இடங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்! -ஜம்இய்யத்துல் உலமா

கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய மேலும் பல இடங்கள் அடையாளம் காணப்பட வேண்டும்! -ஜம்இய்யத்துல் உலமா


கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களின் ஜனாஸாக்களை நிர்ணயிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அடக்கம் செய்வதற்கு வழிவகுத்தமையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச மக்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இலங்கை இராணுவம், பொலிஸ், சுகாதார அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகள் உட்பட இதற்கு பங்களிப்புச் செய்த அனைவரும் எமது நன்றிக்குரியவர்கள்.


$ads={1}


சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்களின் உணர்வுகளை மதித்து, கொரோனா தாக்கத்தினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய பொருத்தமான இன்னும் பல இடங்களும் உரிய அதிகாரிகளால் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றோம். இது கொரோனா தாக்கத்தினால் மரணித்து அடக்கம் செய்ய விரும்பும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான நிர்ணயிக்கப்பட்ட இடங்களைப் பெற உதவியாக இருக்கும்.


அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக்

பதில் தலைவர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.