தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி குறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி குறித்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியிடுவது குறித்த முறையான வழிகாட்டல் ஒன்றை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 178 க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற 10 மாணவர்களின் பெற்றோர்களால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வெட்டுப் புள்ளிகளில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் காரணமாகப் பிரபலமான பாடசாலைகளுக்கு நுழைய வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


$ads={1}


எனவே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு அடிப்படையில் 06 ஆம் வகுப்பிற்குச்செல்ல முறையான வழிகாட்டல் ஒன்றை தயாரிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post