திடீரென திறக்கப்பட்ட சிற்றூர்ந்து கதவு; முன்பள்ளி மாணவி பரிதாப பலி!

திடீரென திறக்கப்பட்ட சிற்றூர்ந்து கதவு; முன்பள்ளி மாணவி பரிதாப பலி!


வெல்லவாய - எல்ல வீதியில் ஹுணுகெட்டிய சந்தியில் இன்று (25) மதியம் ஏற்பட்ட வாகன விபத்தில் முன்பள்ளி மாணவியான சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.


பரகஹஅராவ எனும் பகுதியைச் சேர்ந்த 05 வயது சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான சிறுமி வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளார்.


முன்பள்ளி நிறைவடைந்த பின்னர் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் சிற்றூர்ந்தில், வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேளையில், திடீரென அதன் கதவு திறக்கப்பட்டதன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.


மேற்படி சம்பவத்தின் பின்னர் குறித்த சிற்றூர்தியை செலுத்திய சாரதி வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் நாளை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.