கொரோனா தடுப்பூசி போடப்பட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

கொரோனா தடுப்பூசி போடப்பட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

அஸ்ட்ரா செனெகா கோவிசீல்ட் கொரோனா தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மானுடவியல் மற்றும் மூலக்கூறு ஆய்வுகள் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பெற்ற பிறகு கருவுறாமை ஏற்படுகிறது என்று சமூக ஊடகங்களில் தவறான கருத்து இருப்பதாக பேராசிரியர் நீலிகா மாலவிகே சுட்டிக்காட்டுகிறார்.

"இந்த தடுப்பூசிகளுக்கு இலங்கை மக்கள் பிரதிபலிப்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அதாவது, ஆன்டிபாடிகள் எவ்வாறு உருவாகின்றன. சுமார் 2,000 சுகாதார ஊழியர்களின் இரத்தம் பரிசோதிக்கப்படுகிறது. அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. தற்போது சிறந்த முடிவுகள் உள்ளன என்றே கூறலாம். ஆனால் தடுப்பூசி பற்றி சமூக ஊடகங்களில் பல தவறான கருத்துக்கள் பரவி வருகின்றன. அதில் ஒனறு தான் கருவுறாமை ஏற்படுகிறது. அத்தகைய கதை எங்கிருந்து வந்தது என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அதில் எந்த உண்மையும் இல்லை ”என்று அவர் மேலும் கூறினார்.

அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மொத்தம் 729,562 பேர் உள்ளனர்.

-யாழ் நியூஸ் எம். ஐ. மொஹமட்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post