இராணுவத்தளபதிக்கு சிக்கல் - மனித உரிமைகள் வடக்கிற்கு செல்லவுள்ளனர்!

இராணுவத்தளபதிக்கு சிக்கல் - மனித உரிமைகள் வடக்கிற்கு செல்லவுள்ளனர்!

போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன உள்ளிட்ட 28 பேர் கொண்ட குழுவினருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் மனித உரிமை ஆணையர் மைக்கேல் பேஷெல் குழ்வொன்றை நியமித்துள்ளார். 

விசாரணைக் குழு இலங்கைக்கு மூன்று முறைதடவைகள் வடக்கிற்குச் சென்று போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை எடுக்க இலங்கை அரசிடம் அனுமதி கோரியுள்ளது. எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணைக்காக ஜெனீவா மனித உரிமைகள் பேரவை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து 2.8 மில்லியன் அமெரிக்க டொலரினை பெற்றுள்ளது.

இலங்கை இராணுவ வீரர்களுக்கு எதிராக ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தொடங்கிய முதல் சர்வதேச வழிமுறை இதுவாகும்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.