
இன்று, எதிர்க்கட்சி நாட்டை வளரவிடாமல் சேறு பூசுகின்றது. அரசாங்கத்தின் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து அபிவிருத்தி பணிகள் தொடர வேண்டும்.
அரசாங்கத்தின் திட்டங்களை முறையாக செயல்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த 26 ஆம் திகதி பிற்பகல் பத்தரமுல்ல தியத உயன வளாகத்தில் நடைபெற்ற மாகாண சபை பிரதிநிதிகள் கூட்டத்தில் ஜனாபாதி கலந்துகொண்ட போதே இக்கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
மேல் மாகாணம், வடமேல் மற்றும் தென் மாகாணங்களைச் சேர்ந்த மாகாணசபை அரசாங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.